மகாராணி மூலம் அரங்கேறிய மேகனின் முதல் அரச பாடம்!

Report Print Trinity in பிரித்தானியா
637Shares
637Shares
lankasrimarket.com

இளவரசர் ஹரியின் மனைவியான பின்பு மேகன் மெர்க்கல் தனது முதல் அரச குடும்பத்து பயணத்தை எலிசபெத் மகாராணியுடன் தொடங்கியிருக்கிறார்.

இந்த பயணத்தில் The Duchess of Sussex ஆன மேகன் மெர்க்கல் ராணியுடனான தனது பிணைப்பை வெளிக்காட்டிய விதம் அனைவராலும் கவரப்பட்டது.

இவர்கள் இருவரும் இணைந்து கலந்து கொண்ட முதல் நிகழ்வானது ஷெஷைரில் நடைபெற்றது. அங்கு ராணியும் மெர்க்கலும் சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தனர்.

குழந்தைகள் நடன நிகழ்வொன்றின் போது ராணியின் காதுக்கருகில் சென்று மேகன் எதையோ கூற மகாராணி அதனை கேட்ட உடன் சிரித்த நிகழ்வும் நடந்தது. இதன் மூலம் தங்களுக்கிடையேயான பிணைப்பை மற்றவர்களுக்கு புரிய வைத்திருக்கிறார் மேகன் என்று தான் தோன்றுகிறது.

இந்த நிகழ்விற்காக லண்டனில் இருந்து ரன்கார்ன் ரயில் நிலையத்திற்கு இந்த ஜோடிகள் இருவரும் அரச குடும்பத்திற்கே உரித்தான சிறப்பு ரயிலில் வந்தடைந்தனர்.

இந்த நாளில் மேகன் மெர்க்கலுக்கு 66 ஆண்டு கால அரச அனுபவம் கொண்ட எலிசபெத் மகாராணியாரால் அரச நிகழ்வுகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்கிற பாடம் சொல்லி தரப்படும்.

அரச சிம்மாசனத்தில் 66 ஆண்டு காலமாக அமர்ந்துள்ள மஹாராணி ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான அரச நிகழ்வுகளை இது போன்று நடத்தி காட்டியிருக்கிறார், அவர் தனது அரச பரம்பரை பாதையில் செல்லும் வழியெல்லாம் நீளும் ஆயிரக்கணக்கான கைகளை குலுக்கியபடியே இருக்கிறார்.

அவர் மூலம் மெர்க்கல் அரச பாடம் கற்று கொள்வது அவர் மறுபடியும் அதிர்ஷ்டசாலி என்பதையேதான் சுட்டி காட்டுகிறது.

இந்த நிகழ்விற்கு மேகன் மெர்க்கல் தன் திருமணத்திற்கு உடை வடிவமைத்து கொடுத்தவரான Givenchy யையே இந்த நிகழ்விற்கு உடை வடிமைக்க சொல்லியிருந்தார். எதிர்பார்த்தது போலவே இம்முறையும் மேகன் ஒரு அழகான கிரீம் நிற உடையில் கவனித்தக்க பெல்ட் ஒன்றை அணிந்தபடி அழகிய தொப்பி ஒன்றை அணிந்தபடி அரச பரம்பரைக்கு ஏற்ற கம்பீரமான தோற்றத்தில் அவர் இருந்தார்.

மகாராணி எலிசபெத் Stewart Parvinன் உடை வடிவமைப்பில் எலுமிச்சை நிற பச்சையில் பார்ப்பவர் கண்களை கவரும் வகையில் மேகனுக்கு போட்டியாளராகவே காணப்பட்டார்.

இவ்விருவரும் நிகழ்வுகள் முடிந்ததும் ஒரே காரில் அரச மாளிகைக்கு திரும்பினர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்