பிரித்தானியா மகாராணியுடன் முக்கிய நிகழ்வில் கலந்து கொண்ட மெர்க்கல்: அவரிடம் பெண் கேட்ட கேள்வி?

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியா இளவரசர் ஹரி மற்றும் மெர்க்கலின் திருமணம் கடந்த மே மாதம் நடைபெற்றது.

இவர்களின் திருமணத்திற்கு பின்பு மெர்க்கல் முதல் முறையாக மகாராணி இரண்டாம் எலிசபெத்துடன் சேர்ந்து Cheshire-ல் உள்ள முக்கிய நிகழ்வில் கலந்து கொண்டார்.

அப்போது மெர்க்கலை சந்தித்து பேச வேண்டும் என்பதற்காகவே வேல்ஸ்சின் Chirk பகுதியைச் சேர்ந்த Sharon Briscoe என்ற பெண் அங்கு சென்றுள்ளார்.

மெர்க்கலை சந்தித்த பின்பு, அவரிடம் உங்களின் புதிய வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று அவர் கேட்டுள்ளார்.

அதற்கு மெர்க்கல் மிகவும் நன்றாக செல்கிறது. ஹரியை எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றாக பார்த்து கொள்ளுங்கள் என்று கூற, அதற்கு மெர்க்கல் நிச்சயமாக அவர் ஒரு சிறந்த கணவர் என்று கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மகாரணியும், மெர்க்கலும் Cheshire பகுதிக்கு சென்றவுடன் அங்கு வந்த தன்னுடைய காரில் மகாராணி முதலில் ஏறாமல் மெர்க்கலை முதலில் ஏறும் படி வழிவிட்டது அங்கிருந்தவர்கள் பலரிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்