தனது மகளை வம்புக்கிழுக்கும் வீடியோவை வெளியிட்ட தாயின் கோரிக்கை

Report Print Balamanuvelan in பிரித்தானியா

Abbie McCarthy (15) பிரித்தானியாவின் Manchesterஐச் சேர்ந்த சிறுமி. இவரது தாய், தனது மகளை ஒரு கூட்டம் சிறுமிகள் வம்புக்கிழுத்து துன்புறுத்தும் வீடியோவை ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் வம்புக்கிழுப்பவர்களுக்கு புத்தி வருவதற்காகவும் வெளியிட்டுள்ளார்.

தனது மகளை சிறுமிகள் முடியைப் பிடித்து தரதரவென இருத்தும் அவளை அடித்தும் துன்புறுத்துவதை சமூக ஊடகம் ஒன்றில் வெளியான வீடியோவில் கண்டு அதிர்ச்சியுற்றிருக்கிறார் Carly (36).

ஒரு சிறுமி Abbieயை துன்புறுத்த அதை மற்ற சிறுமிகள் வேடிக்கை பார்ப்பதோடு அதை ஒரு சிறுமி வீடியோ எடுக்கிறாள்.

Abbie தன்னை முடியை பிடித்து இழுக்கும் பெண்ணிடம் தன்னை விட்டு விடுமாறு கெஞ்சினாலும் அதைக் கேட்காமல் அந்த சிறுமி அவளை முகத்தில் குத்துகிறாள்.

வீடியோவைக் கண்டு அதிர்ச்சியுற்ற Carly பொலிசாரிடம் புகாரளித்துள்ளதோடு அந்த வீடியோவை சமூக ஊடகத்திலும் வெளியிட்டு அதைப் பகிரவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்