லண்டன் ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு: மர்ம பொதியால் பரபரப்பு

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள Southgate ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடித்ததில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவத்தை அடுத்து பெருநகர பொலிசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். மட்டுமின்றி மர்ம பொதி ஒன்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு முதலுதவி அளிக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Southgate ரயில் நிலையத்தின் வெளியே பேருந்துக்காக காத்திருந்த நபர் ஒருவர், குறித்த சம்பவம் தொடர்பாக தெரிவிக்கையில், கரும்புகை மற்றும் கருகிய வாசனை எழுந்த சில நொடிகளில் திரளான மக்கள் வெளியேறும் வாசலை நோக்கி விரைவதை கண்டதாக தெரிவித்துள்ளார்.

தற்போது சம்பவம் நடந்த பகுதியில் திரளான என்ணிக்கையில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதுடன் மோப்ப நாய்களுடன் காவலர்களும் அங்கு காணப்படுவதாக சிலர் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்பில் இருந்து பொதுமக்களையும் பொலிசார் வெளியேற்றி வருவதால் சந்தேகம் வலுக்கிறது என ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் Southgate பகுதியில் சாலை போக்குவரத்தையும் பொலிசார் துண்டித்துள்ளனர்.

மட்டுமின்றி பிரித்தானிய போக்குவரத்து பொலிசாரும் Southgate சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்களை உடனடியாக தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...