முன்னாள் உளவாளிகளுக்கு விஷம் வைக்கப்பட்ட நகருக்கு உயிர் கொடுக்க இளவரசர் செய்த செயல்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவின் சாலிஸ்பரி நகரில் முன்னாள் ரஷ்ய உளவாளிகளுக்கு விஷம் வைக்கப்பட்டபிறகு, கலையிழந்த அந்த நகருக்கு மீண்டும் புத்துணர்வூட்டுவதற்காக இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது இந்நாள் மனைவியான கமீலா ஆகியோர் அங்கு வருகை புரிந்தனர்.

சாலிஸ்பரியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் திரண்டு அவர்களை வரவேற்றனர். ரஷ்ய முன்னாள் உளவாளியான Sergei Skripal (66) மற்றும் அவரது மகளான 33 வயது Yulia ஆகியோருக்கு விஷம் வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டதன் காரணமாக சாலிஸ்பரி மக்களின் இயல்பு வாழ்க்கையில் ஏற்பட்ட இடையூறுகளிலிருந்து மக்களை விடுவிக்கும் முயற்சியாக இளவரசரும் அவரது மனைவியும் சாலிஸ்பரிக்கு வருகை புரிந்துள்ளனர்.

நகரம் சுத்தம் செய்யப்பட்டதையடுத்து, சுற்றுலாப்பயணிகளும் ஷாப்பிங் செய்பவர்களும் தங்கள் நகருக்கு வரலாம் என்று உள்ளூர் தலைவர்கள் உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இளவரசரும் அவரது மனைவியும் வந்ததே மக்களை நன்கு உற்சாகப்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

ஏராளமானவர்கள் அவர்களைக் காண தெருக்களில் திரண்டனர்.

தங்கள் கைகளில் கொடிகளை ஏந்திக்கொண்டு பலரும் கமீலாவுக்கு பரிசுகளை வழங்கி சிலரும் என மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers