இதைவிட வேறு தண்டனை இல்லை: தங்கையை கொன்ற வழக்கில் விடுவிக்கப்பட்ட பெண்ணிடம் நீதிபதி உருக்கம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் வாகன விபத்தில் தனது தங்கையை கொன்ற வழக்கில் இருந்து இளம்பெண்ணை நீதிபதி விடுதலை செய்துள்ளார்.

சொந்த தங்கையை இழந்த தண்டனையை விட வேறு தண்டனை அவருக்கு அளிக்க இந்த நீதிமன்றம் தயாரில்லை என அறிவித்த நீதிபதியின் பேச்சு அனைவரையும் நெக்குருக செய்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 வயது Meliha Kaya, தமது சகோதரி Elif(16) மற்றும் அவரது நண்பர் ஒருவருடன் கிழக்கு லண்டனில் உள்ள ஒரு மதுபான விடுதியில் இருந்து கட்டுப்பாடற்ற வேகத்தில் வாகனத்தை செலுத்தி சென்றுள்ளார்.

இந்த நிலையில் எதிரே வந்த இன்னொரு காருடன் மோதி, அருகாமையில் இருந்த சுவற்றில் மீண்டும் மோதியுள்ளது.

நள்ளிரவு சுமார் 1 மணியளவில் நடந்த இந்த கொடூர விபத்தில் சிக்கி படுகாயமடைந்த இளம்பெண் Elif சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட காயா சில வாரங்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று மீண்டார்.

பொதுவாக காரின் பின்னிருக்கையில் மட்டுமே பயணம் செய்யும் Elif, சம்பவம் நடந்த அன்று காயாவுடன் முன்னிருக்கையில் அமர்ந்து பயணம் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் காயாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தமது கண்மூடித்தனமான வாகன ஓட்டுதலே குறித்த விபத்துக்கு காரணம் எனவும்,

அதனாலையே தாம் சகோதரியை இழந்ததாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் காயாவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் 4 ஆண்டுகள் வாகனம் ஓட்ட தடையும் விதித்து தீர்ப்பானது.

ஆனால் இறுதி வாதம் முடித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டுள்ள இளம்பெண் தமது கண்மூடித்தனமான செயலால் தனது சகோதரியை இழந்துள்ளார்.

இந்த இழப்பை அவரால் எதைக் கொண்டும் ஈடுகட்ட முடியாது. அந்த துயரத்தை விடவும் எந்த தீர்ப்பும் அவரை தண்டித்துவிட முடியாது எனவும் நீதிபதி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி காயாவுக்கு வழங்கியிருந்த 2 ஆண்டுகள் சிறை தண்டனையையும் ரத்து செய்து அறிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers