பிரித்தானியாவில் தூக்கில் தொங்கிய இளம்பெண்: காரணம் என்ன?

Report Print Fathima Fathima in பிரித்தானியா

பிரித்தானியாவின் வேல்ஸில் 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவின் வேல்ஸில் வசிப்பவர் Mollie Horton(வயது 22), இவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு சில நாட்களுக்கு முன், உலகிற்கு இரவு வணக்கம், என்னை நானே அணைத்துக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.

சொந்த பிரச்சனைகளின் காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

பிறந்த போது, தாய்- தந்தை பிரிந்து சென்ற நிலையில், தாத்தாவின் கண்காணிப்பில் வளர்ந்துள்ளார்.

கடந்தாண்டு உடல்நலக்குறைவால் தாத்தாவும் உயிரிழந்துள்ளார், இவரது தம்பியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, கடந்த 2013ம் ஆண்டு ஆண் நண்பர் மூலம் பெண் குழந்தையும் உள்ளது.

இவையெல்லாம் சேர்ந்து மன அழுத்தத்தால் Mollie Horton தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இவரது இரத்தத்தில் அதிகளவான ஆல்கஹால் கலந்திருந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...