கடலில் உள்ள அபாயகரமான கொலையாளி: களத்தில் இறங்கிய நீச்சல் வீரர்கள்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

கடலின் அபாயகரமான கொலையாளி என அழைக்கப்படும், fishing gear-யை கடலிலிருந்து அகற்றும் பணியில் பிரித்தானியாவை சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

உலகம் முழுவதிலும் தங்களுக்கு தேவையற்ற பொருள் என கருதும் பலவற்றையும் குறிப்பாக, மக்காத பொருள் என அறிந்திருந்தும் 6 அறிவுடைய முட்டாள் மனிதன், எந்த ஒரு கவலையுமின்றி பிளாஸ்டிக் பொருட்களை கடலில் தூக்கி எறிந்துவிட்டு செல்கிறான். ஆனால் அதனை உணவாக உட்கொள்ளும் உயிரினங்கள் பலவும் நாளடைவில் பரிதாபமாக உயிரிழந்துவிடுகின்றன.

கடல் இனங்கள் அழிவதற்கு சாதாரண பொதுமக்கள் மட்டுமே ஒரு காரணம் என அனைவரும் நினைத்திருக்கையில், கடலை கடவுளாக வணங்கும் மீனவனும், தங்களுக்கு தேவையில்லாதவை என கருதும் மீன் வலைகள் உட்பட பல பொருட்களையும் கடலில் விட்டு வருகிறான்.

மீனவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்தும் fishing gear என்ற உபகரணம், வருடத்திற்கு 6,40,000 டன் அளவிற்கு கடலில் விடப்படுவதாக பிரித்தானியாவை சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர்கள், அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். மேலும் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதற்கு காரணமான பிளாஸ்டிக் பொருட்களில், 58% fishing gear உபகரணம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பிரபல ஆழ்கடல் நீச்சல் வீரர் Dave Kennard கூறுகையில், கடலில் விடப்படும் தேவையற்ற பொருட்களால் மீன்கள் இறப்பதோடு, அவற்றை இரையாக உட்கொள்ளும் பறவைகளும் இறந்துவிடுகின்றன. அவற்றை சரி செய்யும் ஒரு முயற்சியாக, Milford Haven-ன் வடக்கு பகுதியில் உள்ள கடல் பகுதியில் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் இணைந்து கடலில் உள்ள கழிவுகளை நீக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்