பிரித்தானியாவில் பரபரப்பு...தொடரும் கொலை சம்பவங்கள்: பொலிஸார் தீவிர விசாரணை!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவின் Norwich நகர் அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Norwich நகர் அருகே, Rose Lane car park என்னும் இடத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நேற்று கத்தியால் குத்தப்பட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தாக்கப்பட்ட அந்த நபரை மீட்டு Norwich University Hospital-க்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனையை நெருங்குவதற்கு முன்பே அவர் உயிரிழந்துவிட்டார்.

இதற்கிடையில் சந்தேகத்தின் பேரில் 20 வயது நிரம்பிய இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் பேசுகையில், கொலை செய்யப்பட்டவர் 40 வயது மதிக்கத்தக்கவர் எனவும், கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

முன்னதாக நடப்பாண்டில் மட்டும் பிரித்தானியாவின் வெவ்வேறு நகரங்களில் 34 பேர் கொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...