இவரை தெரியுமா? அடையாளம் காண முடியாத பெண்ணை கண்டுபிடிக்க பொலிஸின் இறுதி முயற்சி.

Report Print Trinity in பிரித்தானியா

இங்கிலாந்தின் தென்கிழக்கு பகுதியான East Sussex கடலோரத்தில் கிடந்த பெண்ணின் சடலத்தை கண்டுபிடிப்பதில் இறுதி முயற்சியாக அப்பெண்ணின் முகத்தை வரைந்து அதனை வெளியிட்டிடுக்கிறது East Sussex பொலிஸ்.

Seven Sisters மலை என்றழைக்கப்படும் குன்றில் இருந்து அப்பெண் குதித்ததால் அவர் இறந்திருக்கலாம் என பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

அடையாளம் தெரியாத இப்பெண்ணின் பெயரை மற்றும் முகவரியை கண்டுபிடிக்க போலீசார் எவ்வளவோ முயற்சி செய்தனர்.

இந்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டபோது அது நீரில் மூழ்கி உப்பி சிதைந்து அடையாளம் காண முடியாத வகையில் இருந்ததால் இவரது புகைப்படத்தை வெளியிட முடியாத போலீசார் பல்வேறு வகையில் அவரது அடையாளங்களை காண முயற்சித்தனர்.

ஆனால் ஒரு வருடம் ஆக போகும் நிலையில் இன்னமும் இப்பெண் யார் என தெரியவில்லை. எனவே இறந்த அந்த பெண்ணின் DNA வை பயன் படுத்தி அவரது நகம் மற்றும் பற்கள் கொண்டு அவரது முகம் இப்படித்தான் இருக்கும் என்று DNA மூலம் ஒரு ஓவியம் வரையப்பட்டது.

தங்கள் தேடுதலின் இறுதி முயற்சியாக இந்த ஓவிய முகத்தை வெளியிட்ட பொலிஸார் இறந்து போன பெண் ஐரோப்பியர் எனவும் வயது 25லிருந்து 55ற்குள் இருக்கலாம் எனவும் கூறியிருக்கின்றனர்.

இந்த பெண் நிச்சயம் உள்ளூரை சேர்ந்தவராக இருக்க வாய்ப்பில்லை என போலீசார் கூறுகின்றனர். காரணம் உள்ளூரில் இவர் போன்ற பெண்மணி யாரும் காணாமல் போகவில்லை எனவும் பல்வேறு விதங்களில் இதனை உறுதிப்படுத்திவிட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

உலகின் எந்த பகுதியை சேர்ந்தவராக வேண்டுமானால் இந்த பெண் இருக்கலாம் எனவும் அவரது சடலத்தில் இருந்த அவரது ஆபரணங்கள் இப்பெண்ணை கண்டுபிடிக்க உதவியாக இருக்கலாம் என்பதால் அதனையும் ஓவியத்தில் சேர்த்துள்ளதாகவும் இந்த மரணத்தை பற்றி விசாரித்து வரும் Tod Stewart எனும் காவல்துறை அதிகாரி கூறினார்.

இறந்து ஒரு வருடம் ஆகியும் இப்பெண் யாரென கண்டுபிடிக்க முடியாததால் இந்த DNA மூலம் அவரது முக மாதிரியை வரைந்த முயற்சி செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்