இளவரசர் ஹரியின் மனைவி மேகன் பெரிய ஷூக்கள் அணிவதன் ரகசியம் இதுதானாம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

சமீபத்தில் நடைபெற்ற ராஜ குடும்பத்தினர் பார்வையிட்ட குதிரைப் பந்தய நிகழ்வில் பங்கேற்ற இளவரசர் ஹரியின் மனைவி மேகன் அணிந்து வந்த தேவையை விட பெரிய அளவு ஷூக்கள் விமர்சகர்களின் கண்களுக்கு தப்பவில்லை.

எளிமையான தோல் ஷூக்கள் அணிந்து வந்த மேகன் அவரது கால் அளவை விட பெரிய ஷூக்கள் அணிந்திருப்பதை பலரும் கவனித்தனர்.

இந்நிலையில் மேகன் பொருந்தாத அளவில் ஷூ அணிந்து வந்ததற்காக காரணத்தை புகழ்பெற்ற ஃபேஷன் நிபுணர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

பிரபலங்கள் எப்போதுமே சற்று பெரிய காலணிகளைத்தான் அணிவார்கள் என்று கூறிய அவர், பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி விருது வழங்கும் விழாவாக இருந்தாலும் சரி, ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் அவர்கள் அப்படி செய்வார்கள், அது காலில் ஏற்படும் கொப்புளங்களை தவிர்ப்பதற்காகத்தான் என்றார்.

வசதியில்லாத ஷூக்களை அணிவதைப் போல பெரிய தொல்லை எதுவும் கிடையாது என்ற அவர், மேகன் போன்ற பிரபலங்கள் உயர்ந்த ஹீல் வைத்த ஷூக்களை அணிந்து கொண்டு நீண்ட நேரம் நிற்பதால் அவர்கள் கால்கள் வீங்கிவிடும் என்றும் தெரிவித்தார்.

அதேபோல் அளவில் பெரிய காலணிகளை அணிந்து நடப்பதும் கஷ்டம் என்று கூறிய அவர் ஷூவுக்குள் விரல் பகுதியில் பஞ்சு அல்லது டிஷ்ஷூ வைத்துக் கொள்வது ஒரு நல்ல யுக்தி என்றும் அவ்வாறு வைக்கும்போது நிச்சயம் பெரிய அளவு ஷூ தேவைப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்