காதலியுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த விஜய் மல்லையா: செக் வைத்த லண்டன்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

இந்தியாவின் பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட வங்கிகளில் விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷா் நிறுவனம் ரூ.9,000 கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தவில்லை.

இந்திய வங்கிகளில் கடன் பாக்கி வைத்துள்ள விஜய் மல்லையா லண்டனில் தனது காதலியுடன் வாழ்ந்து வருகிறார்.

லண்டன் அருகே உள்ள தெவின் என்ற பகுதியில் உள்ள வசதியானவர்கள் வசிக்கக் கூடிய ஒரு எஸ்டேட்டில் தனது காதலி பிங்கி லால்வானியுடன் தங்கி உள்ளார். மேலும் இவரை திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

விஜய் மல்லையாவின் சொத்துகளை பறிமுதல் செய்யும்படி லண்டன் உயா் நீதிமன்றத்தில் இந்திய வங்கிகள் சாா்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில், விஜய் மல்லையா தங்கியிருக்கும் இடம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தவும், மல்லையாவுக்கு சொந்தமான பொருள்களை கையகப்படுத்தவும் லண்டன் உயா் நீதிமன்ற சட்ட அமலாக்க அதிகாரிக்கும், அமலாக்கத் துறை ஏஜெண்டுகளுக்கும் அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சோதனையில், மல்லையா தங்கியிருக்கும் பகுதிக்குள் செல்வதற்கு பொலிசாரை பயன்படுத்துவதற்கும், லண்டன் உயா் நீதிமன்ற சட்ட அமலாக்கத் துறை அதிகாரி மற்றும் அவரது கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அமலாக்கத் துறை ஏஜெண்டுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்