இளவரசர் ஹரியின் செல்லப்பெயர்: யார் வைத்தார்கள் தெரியுமா?

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு, மேகன் மெர்க்கலின் நெருங்கிய தோழி ஒருவர் செல்லப்பெயர் ஒன்றை வைத்துள்ளார்.

பிரித்தானிய அரச குடும்பத்தில் பொதுவாக செல்லப்பெயர் வைத்துக்கொள்ளமாட்டார்கள். ஆனால் மகாராணிக்கு அவரது பேரனான குட்டி இளவரசர் ஜார்ஜ், Gary என செல்லப்பெயர் வைத்திருந்தார். மகாராணியை அவர் இவ்வாறு தான் அழைப்பார்.

மகாராணிக்கு அடுத்தபடியாக இளவரசர் ஹரிக்கு செல்லப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் மற்றும் மனநல சுகாதார பிரச்சாரகரான Bryony Gordon என்பவர் மெர்க்கலின் நெருங்கிய தோழி ஆவார்.

இவர் ஹரிக்கு, "Hazza" என செல்லப்பெயர் வைத்துள்ளார். இளவரசர் ஹரி மிகுந்த மேன்மையான மனிதர் மட்டுமல்லாமல் சிறந்த செயல்களை செய்கிறார் என்பதால் அவருக்கு இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இவர் இதற்கு முன்னர் இளவரசர் ஹரியை சந்தித்து அவருடன் தேநீர் அருந்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்