பிரித்தானியாவில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்.. அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் 18 வயது இளம்பெண்ணை, தனியார் நிறுவனத்தில் ஆலோசகராக பணிபுரியும் ஒருவர் வலுக்கட்டாயமாக தூக்கிக்கொண்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ள வழக்கு தொடர்பாக நீதிமன்றம் நேற்று குற்றவாளிக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது.

பிரித்தானியாவில் இயங்கி வரும், The Pricewaterhouse Coopers நிறுவனத்தில் ஆலோசகராக பணியாற்றி வருபவர் Sanjay Naker (28). இவர் கடந்த மார்ச் 11, 2017 அன்று, இரவு லண்டன் Tooley Street வழியாக சென்று கொண்டிருக்கும் போது, மிதமிஞ்சிய நிலையில் மது அருந்தியிருந்த 18 வயது இளம்பெண் ஒருவர் தடுமாறி சென்று கொண்டிருப்பதை பார்த்துள்ளார்.

இதனையடுத்து அவளது அருகில் சென்ற Sanjay, வேகமாக அவளை தனது தோளில் தூக்கிக்கொண்டு, ஆள் யாரும் இல்லாத ஒரு சந்து பகுதியில் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

வீடியோவை காண

இதற்கிடையில் அருகில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்கள் சிலர், இருவரும் அரைநிர்வாணத்தில் இருப்பதை சிசிடிவியின் மூலம் பார்த்துவிட்டு அருகில் சென்று விசாரித்துள்ளனர். அதற்கு பதிலளித்த Sanjay, நாங்கள் இருவரும் கிளப்பில் இருந்து வருகிறோம் என கூறியதோடு, இளம்பெண்ணின் விருப்பத்தின் பேரிலே இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறியுள்ளார். மேலும், தன்னுடைய முழு முகவரியையும் ஊழியர்களிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

இதனையடுத்து அரைநிர்வாண கோலத்தில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட அந்த இளம்பெண் ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர், பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதை அறிந்துகொண்டு காவலர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர் சம்மந்தப்பட்ட இளம்பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில், தனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை என்றும், நேற்று இரவு நடந்தது பற்றி தனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை எனவும் அந்த பெண் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து குற்றவாளி Sanjay-யை கைது செய்த காவல்துறையினர், Inner London Crown Court-ல் ஆஜர்படுத்தினர். அங்கு வழக்கினை விசாரித்த நீதிபதி Freya Newberry, குற்றவாளி Sanjay-க்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்