பிரித்தானியாவில் வெயிலில் உருகிய தார்ச்சாலை: மீன்கள் கூட பாதிக்கப்பட்ட சோகம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் வெப்பநிலை 91.4F (33C)யை எட்டியதையடுத்து தார்ச்சாலைகள் உருகத் தொடங்கியுள்ளன.

Newbury பகுதியில் சாலையில் சென்ற லொறி ஒன்று தார்ச்சாலை உருகியதால் சாலைக்குள் புதையுண்டது.

வானிலை ஆராய்ச்சி மையம் லண்டனில் இன்று வெயில் கடுமையாக இருப்பதோடு வார இறுதியிலும் இதே சூழல் நீடிக்கும் என்றும் கூறியுள்ளது.

வீட்டில் வளர்க்கும் மீன்களும் வெயிலால் பாதிக்கப்பட்டு நிறம் மாறியுள்ளதையடுத்து செல்லப்பிராணிகள் வளர்ப்போர் தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

ஸ்காட்லாந்தில் மட்டும் மழை பெய்யலாம் என்று கூறியுள்ள வானிலை ஆராய்ச்சி மையம் மீதிப் பகுதிகள் ஜூலை இறுதி வரை வறண்டே காணப்படும் என்று தெரிவித்துள்ளது.

1976க்குப் பிறகு பிரித்தானியா இப்போதுதான் கடும் வெயிலை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்