காதலர்களுக்கு இடையே நடந்த சண்டை.. சமாதானம் செய்ய முயன்ற பெண்ணுக்கு நடந்த கொடூரம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் காதலர்களுக்கு இடையே நடந்த சண்டையின் பொழுது, சமாதானம் செய்து வைக்க முயன்ற பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Milton Keynes பகுதியில் வசித்து வருபவர் Kirsten Ashby (27). இவர் தனது அண்டை வீட்டில் காதலர்கள் இருவருக்கிடையே நடைபெற்ற சண்டையினை விலக்கி விடும் முயற்சியாக அவர்களது வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஆனால் அங்கு நடந்த சண்டையில் ஆத்திரமடைந்த காதலன் Raymond Bowen, திடீரென Kirsten மீது பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளான். இதில் Kirsten-ன் முகம் முழுவதும் சேதமடைந்ததோடு, கை விரல்களும் எரிந்துள்ளது.

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Kirsten-க்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். முகத்தில் பெரும்பாலான பகுதிகள் எரிந்து விட்டதால், அவரது தொடை பகுதியின் சதைகளை எடுத்தே மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுவரை Kirsten-ற்கு 80க்கும் மேற்பட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், சம்மந்தப்பட்ட குற்றவாளி Raymond Bowen-க்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டன.

முன்னதாக Kirsten பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவரது குழந்தை Maddison-ஐ, Kirsten பெற்றோர் Lynn மற்றும் Paul தங்களது பாதுகாப்பில் வளர்த்து வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்