பிரித்தானியாவில் பெண்களின் செல்போனிலிருந்து நிர்வாண புகைப்படங்களை திருடிய நபர்கள்: பகீர் தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் பெண்களின் செல்போனிலிருக்கும் நிர்வாண புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றி திருடிய செல்போன் கடை உரிமையாளர்கள் மற்றும் மேலாளரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பிரித்தானியாவின் Middleton பகுதியில் Flint Audio Video store என்ற கடை செயல்பட்டு வந்துள்ளது.

இக்கடையில் கம்ப்யூட்டர் மற்றும் செல்போன்கள் போன்றவை பழுது பார்க்கப்பட்டு வந்த நிலையில், திடீரென்று பொலிசார் கடையில் சோதனை செய்த போது கடையின் மேலாளர் மற்றும் கடை உரிமையார்கள் என மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவிக்கையில், இக்கடைக்கு பெண்கள் தங்களுடைய செல்போன்களோ அல்லது கம்ப்யூட்டரோ சரி செய்து கொடுக்கும் படி கொடுத்தால், அவர்கள் சரிசெய்து கொடுப்பது மட்டுமின்றி அவர்களுக்கு தெரியாமலே அவர்களின் போன்கள் மற்றும் கம்ப்யூட்டரில் இருக்கும் நிர்வாண புகைப்படங்களை ஸ்கேன் செய்து திருடியுள்ளனர்.

இதை அனைத்தையும் அக்கடையின் மேலாளர் உடனடியாக எடுத்து தன்னுடைய இரண்டு உரிமையாளர்களுக்கும் அனுப்பியுள்ளான். இது போன்று 1000-க்கும் மேற்பட்ட பெண்களின் நிர்வாண புகைப்படங்களை அனுப்பியுள்ளான்.

இதனால் இவர்களிடம் எத்தனை பெண்கள் சிக்கியுள்ளனர் என்பது தெரியவில்லை, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிசார் கூறியுள்ளனர்.

அக்கடைக்கு இரண்டு உரிமையாளர்கள் எனவும் ஒருவரின் பெயர் Gary Gagne(58) எனவும் மற்றொருவரின் பெயர் Daniel Anton(35) என்றும் இவர்களுக்கு புகைப்படங்களை பகிர்ந்த மேலாளரின் பெயர் George Quintal எனவும் பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்