அரை இதயத்துடன் பிறந்த அதிசய குழந்தை... பிரித்தானிய தாயின் பாசப்போராட்டம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா
251Shares
251Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் அரை இதயத்துடன் பிறந்த Myla Curtis என்ற குழந்தை தற்போது பள்ளிக்கு செல்ல ஆரம்பித்து விட்டதாக அவரது தாயார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் Droitwich பகுதியை சேர்ந்தவர்கள் Jamie Curtis - Josh Stevens தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 2016-ம் அரை இதயத்துடன் Myla Curtis என்ற பெண் குழந்தை பிறந்தது. தற்போது வரை பல்வேறு இன்னல்களுடன், மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் Myla பிறப்பு பற்றி அவரது தாயார் விவரித்துள்ளார்.

இதுகுறித்து Jamie (26) கூறுகையில், நான் கர்ப்பமடைந்து 25 வாரங்கள் கழித்து குழந்தையின் வளர்ச்சியை ஸ்கேன் செய்து பார்ப்பதற்காக Worcester-ல் உள்ள ராயல் மருத்துவமனைக்கு சென்றோம்.

அங்கு, மருத்துவர்கள் குழந்தையின் இதய வளர்ச்சியில் குறைபாடு இருப்பதால், குழந்தையின் பிறப்பு குறித்து சந்தேகம் தெரிவித்தனர் . இதனை கேட்ட உடனே அதிர்ச்சியில் உறைந்த எனது கண்களில் இருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது.

என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த வேளையில், Birmingham பெண்கள் மருத்துவமனைக்கு என்னை அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், குழந்தை நீண்ட நாட்களுக்கு உயிருடன் இருப்பது சந்தேகம் தான் என தெரிவித்தனர். மேலும், கர்ப்பத்தை நிறுத்துவதற்கான சந்தர்ப்பத்தையும் மருத்துவர்கள் எனக்கு ஏற்படுத்தி கொடுத்தனர். ஆனால் நானும் எனது கணவரும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அவளும் இந்த உலகில் வாழ வேண்டும் என்றே நாங்கள் விரும்பினோம்.

பின்னர் ஒரு வழியாக Myla பிறந்தாள். அவள் பிறந்த 5 நாட்களிலே அவளுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. குழந்தை என்பதால் அந்த நிலையில் அவளை கவனிப்பது மிகவும் கடினமாக இருந்தது. பின்னர் அவளுக்கு 18 மாதங்கள் கழித்தும் ஒரு அறுவை சிகிச்சை மற்றும் வயது முதிர்ந்தவுடன் ஒரு அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

அதன்படி மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது அறுவைசிகிச்சைக்கு பின்னர் Myla தற்போது மிகவும் மகிழ்ச்சியாக அவளது நண்பர்களுடன் விளையாடுகிறாள். ஆனால் ஒரு சில நேரங்களில் மட்டும் அவளது ரத்த ஓட்டத்தில் ஏற்படும் சீரற்ற நிலையினால் மூச்சுத்திணறல் உண்டாகும் என கூறியுள்ளார்.

ஆனால் அவள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள் என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் Jamie.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்