பிரித்தானியாவில் 84 வயது பெண்மணிக்கு நேர்ந்த கொடூரம்: கொந்தளித்த உறவினர்கள்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
440Shares
440Shares
lankasrimarket.com

பிரித்தானிய தலைநகர் லண்டனின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள வாக்கிங்ஹாமில் குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

இங்குள்ள லூப் சாலையில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் 84 வயது Joyce Burgess குடியிருந்து வந்துள்ளார்.

இவரது குடியிருப்பில் புகுந்த கொள்ளையன் இவரை கொடூரமாக தாக்கிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தன்று கடும் வெப்பம் காரணமாக தமது குடியிருப்பின் முக்கிய வாசலை திறந்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் அந்த குடியிருப்புக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் கொள்ளையிடும் நோக்கத்தில் அவரை கொடூரமாக தாக்கியுள்ளான்.

இதில் படுகாயமடைந்த மூதாட்டியை குற்றுயிராக விட்டுவிட்டு வீட்டை கொள்ளையிட்டு சென்றுள்ளார்.

உயிருக்கு போராடிய மூதாட்டியின் அழுகுரல் கேட்டு விரைந்து சென்ற அக்கம்பக்கத்தினர்,

இது பயங்கரமான செயல் எனவும் தப்பிய கொள்ளையனை கைது செய்ய பொதுமக்கள் கண்டிப்பாக உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மட்டுமின்றி குறித்த மூதாட்டியை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கும் சேர்ப்பித்துள்ளனர்.

இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் Joyce Burgess சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் Surrey பொலிசார், இச்சம்பவத்தை கொலை வழக்காக விசாரிக்க வேண்டுமா என்பதை இன்னமும் முடிவு செய்யவில்லை என தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இச்சம்பவத்தை வன்முறை மற்றும் உணர்ச்சியற்ற செயல் என குறிப்பிட்டுள்ள பொலிசார், தொடர்புடைய குற்றவாளி பொலிசாரிடம் தானே முன்வந்து சரணடைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்