மீண்டும் சர்ச்சையில் மேகன் மெர்க்கல்: இம்முறை என்ன தவறு செய்தார்?

Report Print Balamanuvelan in பிரித்தானியா
382Shares
382Shares
lankasrimarket.com

பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கலுக்கு சர்ச்சையில் சிக்குவதே வாடிக்கையாகி விட்டது.

ஒரு நடிகையாக இருந்து பிரித்தானிய ராஜ குடும்பத்திற்குள் நுழைந்து விட்டாலும் ராஜ குடும்ப மரபுகளைப் பின்பற்ற திணறித்தான் போகிறார் மேகன் மெர்க்கல்.

உடையலங்காரத்திலிருந்து, உணவு உண்பது வரை மேகன் செய்யும் ஒவ்வொன்றையும் உற்றுப் பார்க்கும் சமூகம் அவரது தவறுகளை சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கிறது. அடிக்கடி மேகன் தவறும் ஒரு விடயம் அவர் அமர்ந்திருக்கும் ஸ்டைல்.

சமீபத்தில், மீண்டும் அவர் உட்காரும் விதம் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது. விமானப்படையின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் அவர் உட்கார்ந்த விதம் ராஜ மரபை மீறும் விதமாக இருந்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அவர் அந்த நிகழ்ச்சியில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தார், அது ராஜ குடும்பத்து பெண்களுக்கு முற்றிலும் மறுக்கப்பட்ட ஒரு விடயமாகும்.

நன்னடத்தையியல் நிபுணரான William Hanson கூறும்போது, பெண்கள் ராஜ குடும்பத்தவர்களாக இருந்தாலும் சரி சாதாரண குடும்பத்தவர்களாக இருந்தாலும் சரி, கால் மேல் கால் போட்டு அமரக்கூடாது என்பது மரபாக இருக்கும் நிலையில், மேகன் தன் ஸ்டைலில் வசதியாக கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.

இருந்தாலும் அவரது இரண்டு கணுக்கால்களுக்கும் இடையில் அதிக இடைவெளி இல்லாமல் அவர் சரியாக உட்கார்ந்திருக்கிறார், ஏனென்றால் ஆணானாலும் பெண்ணானாலும் அவ்வாறு உட்காருவது பார்க்க மோசமாக இருக்கும் என்று கூறியுள்ளார் அவர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்