பிரித்தானியாவில் பிச்சை கேட்ட ஆதரவற்ற நபருக்கு தொழிலதிபரின் நெகிழ வைக்கும் பதில்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
316Shares
316Shares
lankasrimarket.com

பிரித்தானியாவின் நியூகேஸில் நகரில் பிச்சை கேட்ட ஆதரவற்ற இளைஞருக்கு தொழிலதிபர் ஒருவர் வேலை வாய்ப்பு வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூகேஸில் நகரில் இந்த மாத துவக்கத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. Ryan Davidson என்ற 25 வயது இளைஞர் தொழிலதிபர் James Minn அந்த வழியாக கடந்து சென்றபோது சில்லரை இருந்தால் தந்துதவும்படி கேட்டுள்ளார்.

அன்றைய தினம் தமது 15-வது திருமண நாளை கொண்டாடி வரும் James Minn தமது மனைவி மற்றும் இரு நண்பர்களுடன் அந்த இளைஞரிடம் பேச்சுக் கொடுத்துள்ளார்.

இதில், அந்த இளைஞருக்கு கடந்த 3 ஆண்டுகளாக வேலை இல்லை என்பது தெரிய வந்ததும் உடனடியாக தமது நிறுவனம் ஒன்றில் வேலை தர முன்வந்துள்ளார்.

நடந்த சம்பவத்தை தம்மால் இன்னமும் மறக்க முடியவில்லை எனக் கூறும் Ryan Davidson, உண்மையில் James Minn தமக்கு பிச்சை தருவதற்கு பதில் வாழ்க்கை அமைத்து தந்துள்ளார் என்றார்.

குறித்த சம்பவத்தை தொழிலதிபர் James Minn தமது பேஸ்புக் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார்.

பலர் இந்த சம்பவத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளதுடன், உயரிய செயல் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்