105 வயதில் மூதாட்டி செய்த வேலை: வாழ்த்து கூறிய பிரித்தானிய ராணி

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் 105 வயதை தாண்டியும். தளராத நிலையில் இருக்கும் மூதாட்டி ஒருவருக்கு பிரித்தானிய ராணி வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

பிரித்தானியாவின் Lincolnshire பகுதியில் உள்ள Cloverdale Care Home-ல் வசித்து வருபவர் Olive France. இவர் சமீபத்தில் குடும்பத்துடன் இணைந்து தனது 105-வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்பொழுது அவரிடம் உங்களது நீண்டகால வாழ்க்கையின் ரகசியம் என்ன என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளிக்கும் விதமாக, உடனடியாக நாற்காலியில் இருந்து எழுந்த Olive, இரண்டு முறை அப்படியே குனிந்து தனது கால் பாதத்தை தொட்டார். இளமை காலங்களில் இளைஞர்கள் கூட செய்ய இயலாத ஒன்றை 105 வயதை தாண்டியும் மூதாட்டி ஒருவர் செய்வதை பார்த்த பொதுமக்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விவசாய குடும்பத்தில் பிறந்த Olive தனது 15 வயதிலே பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலை செய்ய ஆரம்பித்தார். 1955-ம் ஆண்டு அவரது கணவர் Jack இருந்த பின்னர் குடும்பத்தினை அவரே வேலை செய்து நடத்தி வந்துள்ளார். கிறிஸ்தவ ஆலயத்தில் பாடகர் குழுவில் இருந்த Olive-விற்கு பாடல் பாடுவது என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று.

கடந்த 18 மாதங்களாக Cloverdale Care Home-ல் வசித்து வரும் Olive-வின் 105-வது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக மகன் Alan (67), தனது மனைவி Jenny, இரண்டு மகள்கள் மற்றும் தனது 5 பேரக்குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு Buckinghamshire-ல் இருந்து வருகை தந்திருந்தார்.

மிகவும் வெகுவிமரிசையாக நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் பலரும் கலந்துகொண்டு மகிழ்ச்சி தெரிவித்திருந்த நிலையில், பிரித்தானிய ராணி எலிசபெத் வாழ்த்துக்கள் கூறி Olive-விற்கு தந்தி ஒன்றினை அனுப்பியிருந்தார்.

முன்னதாக பிரித்தானிய ராணி எலிசபெத் கடந்த ஏப்ரல் மாதம் தன்னுடைய 92-வது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்