இனி அவனுக்கு முத்தம் தரமுடியாது... சடலமாக கிடக்கும் மகன்: தாயின் உருக்கமான கோரிக்கை

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த இளைஞர் ஸ்காட்லாந்தில் உயிரிழந்துவிட்ட நிலையில் அவரின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவுங்கள் என தாய் கோரிக்கை வைத்துள்ளார்.

Middlesbrough நகரை சேர்ந்தவர் ஆண்டி லீ (21). மனைவியின் பிரசவத்துக்காக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஸ்காட்லாந்தின் Dumbarton நகருக்கு லீ சென்ற நிலையில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தைக்கு டாமி என பெயர் வைக்கப்பட்டது.

இந்நிலையில், லீ கடந்த சனிக்கிழமை திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார்.

அவரின் சடலத்தை Middlesbrough-க்கு கொண்டு வர குடும்பத்தாரிடம் பணம் இல்லாத நிலையில் அதற்கு தேவைப்படும் £2,000 பணத்தை மக்கள் கொடுத்து உதவ லீ குடும்பத்தார் கோரியுள்ளனர்.

இது குறித்து பேசிய லீயின் அம்மா வால், எங்கள் வீட்டுக்கு லீ வந்தால் போதும், அவனை இனி கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முடியாது.

பலரும் பணம் கொடுக்க முன்வருகிறார்கள், லீ-க்கு எத்தனை நண்பர்கள் உள்ளார்கள் என்றே தெரியாது. அந்தளவு நணர்கள் பட்டாளம் அவனுக்கு அதிகம் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்