குழந்தையின் கண்முன்னே தூக்கில் தொங்கிய தாய்: பிரித்தானியாவில் சம்பவம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் 3 வயது குழந்தையின் கண்முன்னே தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த Agnieszka Giza (23) கடந்த 2015-ம் ஆண்டு Wigan பகுதியில் Marek (30) என்பவரை சந்தித்துள்ளார்.

அன்று முதல் ஒன்றாகவே சேர்ந்து வாழ்ந்து வந்த இருவருக்கும் 3 வயதில் குழந்தை ஒன்று இருந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 24 ம் தேதியன்று Goralczk என்பவர் ஏற்பாடு செய்திருந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக Marek புறப்பட்டுள்ளார்.

அப்போது தானும் சேர்ந்து வருவதாக Giza விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் நண்பர்கள் யாரும் அவர்களது மனைவிகளை அழைத்து வராததால், தான் மட்டும் சென்று விட்டு வருவதாக Marek கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த Giza, தனக்கு தெரியாமல் கணவர் யாருடனோ தொடர்பில் இருப்பதாக சந்தேகப்பட ஆரம்பித்துள்ளார்.

அன்று இரவு அதிகமான மது போதையில் இருந்ததால் வீட்டிற்கு வர முடியாத Marek பவுல் என்பவரின் வீட்டிலேயே உறங்கிவிட்டார்.

இதற்கிடையில் வீட்டில் கோபமாக இருந்த Giza, வாட்ஸ் ஆப் மூலம் Marek-ற்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். அந்த சமயம் Marek போனில் சார்ஜ் இல்லாததால் போன் அணைந்துவிட்டது.

Marek-டம் இருந்து பதில் வராததால் மேலும் மனமுடைந்த Giza உடனடியாக வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார்.

இதனையடுத்து மறுநாள் காலையில், துப்புரவு பணியாளர் ஒருவர் வீட்டிற்கு வரும்பொழுது Giza அறையிலிருந்து குழந்தை அழுதுகொண்டிருக்கும் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

குழந்தை விடாமல் தொடர்ச்சியாக அழுதுகொண்டிருந்தததால் சந்தேகமடைந்த அந்த பணியாளர், உடனடியாக மற்றொருவரின் உதவியை நாடி வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தபொழுது, அழுதுகொண்டிருந்த குழந்தையின் அருகே கயிற்றில் சடலமாக Giza தொங்கியுள்ளார்.

இதனையடுத்து பணியாளர்கள் இருவரும் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த பொலிஸ் அதிகாரிகள், Giza-வின் மரணம் தற்செயலானது எனக்கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்