இளவரசி மெர்க்கலின் தந்தை இறந்துபோனால் அவர் செவிசாய்ப்பாரா?

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

தனது மகள் மேகன் மெர்க்கலை சந்திக்கும் வரை ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதை நிறுத்தமாட்டேன் என பிடிவாதமாக இருக்கிறார் தந்தை தாமஸ் மெர்க்கல்.

தாமஸ் மெர்க்கல் எந்த அளவுக்கு தனது மகளை பார்க்க வேண்டும் என்பதில் அதிக முனைப்பு காட்டுவருகிறாரோ அதே அளவுக்கு மெர்க்கலின் சகோதரி சமந்தா, தனது டுவிட்டர் பக்கத்தில் மெர்க்கல் குறித்து மோசமாக விமர்சனம் செய்து வருகிறார்.

மெர்க்கல் பிரித்தானிய அரச குடும்பத்தின் முட்டாள் என சமந்தா ஏற்கனவே விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியின் நினைவுநாளை முன்னிட்டு, மெர்க்கல் தனது கணவர் ஹரியுடன் மண்டேலா அருங்காட்சியகத்திற்கு சென்றுள்ளார்.

இந்த புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவிட்டு, உனது தந்தை இறந்துபோனால் நீ எவ்வாறு அவருக்கு அஞ்சலி செலுத்துவாய். தந்தையின் இறப்பு செய்தியை கேட்டால் மெர்க்கல் செவிசாய்ப்பாரா? மெர்க்கல் ஒரு மனிதாபிமானமுள்ள பெண்ணாக நடந்துகொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்