நண்பருடன் ஆடை இல்லாமல் படுத்து கிடந்த பெண்: வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்ட இளைஞனால் ஆத்திரம்

Report Print Santhan in பிரித்தானியா

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த நண்பர் ஒருவர் தன் நண்பர் மற்றொரு பெண்ணுடன் நிர்வாணமாக இருப்பது தொடர்பான வீடியோவை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ததால், அவர் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார்.

ஸ்காட்லாந்தின் Falkirk நகரில் இருக்கும் Polmont கிராமத்தைச் சேர்ந்தவர் Jacob Macaloney. இவர் இன்று காலை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்திருந்தார்.

அந்த வீடியோவில் முதலில் கண்ணாடி போட்ட நிலையில் வரும் இவர், அதன் பின் திடீரென்று தன்னுடைய மொபைல் போனில் கமெராவை திருப்பிய போது, அங்கிருந்த படுக்கையில் ஆண் மற்றும் பெண் இருவரும் நிர்வாணமாக படுத்து கிடந்துள்ளனர்.

அவர்களை அப்படியே நிர்வாணமாக எடுத்து, அவர் முகத்தின் அருகே கொண்டு சென்று, அதன் பின் அவர்கள் உடலின் ஒவ்வொரு பாகங்களையும் படம் பிடித்துள்ளார். குறிப்பாக அந்த பெண்ணையே அதிகம் படம் பிடித்துள்ளார்.

இந்த வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போது, அவர் சிரிப்பை அடக்க முடியாம தொடர்ந்து சிரிக்கிறார்.

இதைக் கண்ட இணையாவாசிகள் சிலர் அந்த வீடியோவை உடனடியாக பொலிசாருக்கு டேக் செய்துள்ளனர். இது ஒரு குற்றம் என்று இது அவர்களின் உரிமை என்று இளைஞனை திட்டி தீர்த்துள்ளனர்.

அதன் பின் இந்த வீடியோ டுவிட்டரில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த வீடியோ குறித்து Jacob Macaloney கூறுகையில், நான் ஒரு விளையாட்டிற்காகத் தான் இப்படி செய்தேன். அதை நீக்கவிட்டேன், அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

குறித்த இளைஞன் எடுத்த வீடியோ அவரின் நண்பர் எனவும், ஸ்பெயினில் உள்ள Magaluf பகுதிக்கு அவர்கள் விடுமுறைக்காக சென்ற போது, இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வீடியோ குறித்து பொலிசார் நடவடிக்கை எடுத்தார்களா? இல்லையா? என்பது குறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers