எங்கிருக்கிறேன் என்றே தெரியவில்லை: இறப்பதற்கு முன்பு பள்ளி மாணவியின் இறுதி வார்த்தை

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் மது போதையில் இருந்த பள்ளி மாணவி ரயில்வே தண்டவாளத்தில் உயிரிழந்து கிடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கெண்ட் கவுண்டியை சேர்ந்தவர் தய்யா பீபில்ஸ் (16). பள்ளி மாணவியான இவர் தனது சக மாணவி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வெளியில் சென்றுள்ளார்.

அங்கு அதிகளவில் மது குடித்த தய்யா ரயில் நிலையத்துக்கு தனியாக வந்து கொண்டிருந்த போது அங்குள்ள ரயில் ஒயரில் உள்ள மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து பேசிய தய்யாவின் தோழி ஜமீலா, பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்த பின்னர் இரவு 10.55-க்கு எனக்கு தய்யா போன் செய்தார்.

அப்போது, நான் எந்த இடத்தில் இருக்கிறேன் என்றே எனக்கு தெரியவில்லை என கூறிய நிலையில் போன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து பார்ட்டி நடந்த ஹொட்டலுக்கு நான் சென்று பார்த்த போது அவர் இல்லை.

பின்னர் தான் ரயில் தண்டவாளத்தில் தய்யா சடலமாக இருப்பது தெரிந்தது என கூறியுள்ளார்.

தய்யாவின் காதலர் ஆடம் கூறுகையில், எனக்கும் தய்யாவுக்கும் சிறிய சண்டை ஏற்பட்ட நிலையில் பார்டியிலிருந்து அவர் தனியாகவும், நான் தனியாகவும் சென்று விட்டோம்.

அவர் தண்டாவாளத்தில் சடலமாக கிடக்கிறார் என வந்த செய்தி எனக்கு அதிர்ச்சியளித்தது என சோகத்துடன் கூறியுள்ளார்.

இதனிடையில் சம்பவம் குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் இது ஒரு விபத்து என உறுதியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்