பிரித்தானியாவில் 13 வயதில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் 13 வயதில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி தற்போது தன்னுடைய படிப்பை சிறப்பாக முடித்து, தன்னைப் பற்றி பேசியவர்களின் வாயை அடைத்துள்ளார்,

பிரித்தானியாவின் Stanley நகரத்தின் Co Durham பகுதியைச் சேர்ந்தவர் Kayleigh . தற்போது 16 வயதாகும் இந்த சிறுமி, 13 வயதிலே கர்ப்பமடைந்து குழந்தையும் பெற்றெடுத்தார்.

இதனால் இனி இவளின் வாழ்க்கை அவ்வளவு தான், படிப்பை கூட சரியாக படிக்க முடியாது என்று அவர் தோழிகள் உட்பட பலரும் கூறியுள்ளனர்.

இதனால் கடும் மனவேதனையில் இருந்த சிறுமியைப் பற்றி ஆச்சரியப்பட வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. Kayleigh தானா இது? என்றளவிற்கு உள்ளார்.

அவர் குறித்து உள்ளூர் ஊடகம் தெரிவிக்கையில், Kayleigh தற்போது தன்னுடைய பள்ளி படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டார் எனவும் இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவும் கூறியுள்ளது.

பார்க்க இளவரசி போன்று தோற்றம் அளிக்கும் வகையில்இருக்கும் அந்த இரண்டு வயது சிறுமியுடன் Kayleigh ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார்.

இவர்கள் இருவரும் எடுத்துக் கொண்டது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Kayleigh 13 வயது இருக்கும் போது தான் கர்ப்பமாக இருப்பதை பெற்றோரிடம் மறைத்துள்ளார். ஏனெனில் பெற்றோருக்கு தெரிந்தால் இது பிரச்சனையாகிவிடும் என்று பயந்துள்ளார்.

அதன் பின் 6 மாத கர்ப்பிணியாக இருப்பதை அவளின் பெற்றோர் அறிந்துள்ளனர். ஆனால் பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், தாங்கள் தாத்தா-பாட்டியாக இருக்கிறோம் என்று கூறி ஆதரவாக இருந்துள்ளனர்.

ஆனால் சிறுமியோ எப்படி கர்ப்பமானார் என்பது குறித்து தெரிவிக்கவில்லை.

இந்த இடைப்பட்ட காலங்களில் தான் பட்ட மோசமான அனுபவங்கள் குறித்து Kayleigh கூறுகையில், நான் வீட்டில் என் குழந்தையுடன் இருப்பேன், அப்போது என்னை பலரும் பல விதமாக பேசினர்.

ஆனால் நான் தீவிர முயற்சி செய்தேன். நிறைய கஷ்டங்கள் அனுபவித்தேன். தற்போது என் குழந்தைக்கு நல்ல ஒரு தாயாக இருக்கிறேன் என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

மேலும் Kayleigh-வின் இரண்டு வயது குழந்தையின் பெயர் ஹார்லி எனவும், தற்போது பள்ளி படிப்பை முடித்துள்ள Kayleigh வரும் செப்டம்பர் மாதம் இசைக் கல்லூரியில் சேரப்போவதாகவும் கூறப்படுகிறது.

தன்னைப் பற்றி பல கடுமையான சொற்கள் வந்த போதும், Kayleigh தன்னுடைய படிப்பை நல்ல படியாக முடித்து குழந்தைக்கு நல்ல ஒரு தாயாகவும் இருந்து வருகிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...