மினி பேருந்து - கார் நேருக்கு நேர் மோதல்: ரத்த வெள்ளத்தில் மிதந்த 10 பேர்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய சாலையில் மினி பேருந்து - கார் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Moray பகுதியில் உள்ள சாலையில் நேற்று இரவு திடீரென வேகமாக வந்து கொண்டிருந்த மினி பேருந்து -கார் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோரா சம்பவத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனை பார்த்த இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து விபத்து நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த மற்ற 5 பேரை மீட்டு உடனடியாக Raigmore மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கவலைக்கிடமான நிலையில் அவர்கள் 5 பெரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்திற்கான காரணாம் குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்