பெற்றோர் கண்முன்னே கார் மோதி தூக்கி வீசப்பட்ட சிறுமி... துடிதுடித்து பலியான பரிதாபம்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் பெற்றோரின் கண்முன்னே 6 வயது சிறுமி ஒருவர் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Smethwick பகுதியில் உள்ள Oldbury சாலையில் பெற்றோருடன் சென்ற 6 வயது சிறுமி, சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று திடீரென மோதியதில் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த சிறுமி அடுத்த சில நிமிடங்களில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, 27 வயதுள்ள ஆண் மற்றும் 26 வயதுள்ள பெண்ணையும் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற பகுதியை முடக்கி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதோடு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...