திருமணமான 100 ஆண்களுடன் டேட்டிங் சென்றுள்ளேன்: பகீர் கிளப்பும் லண்டன் பெண்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

லண்டனை சேர்ந்த பெண் தொழிலதிபர் Gweneth Lee(46) என்பவர் திருமணமான ஆண்களுடன் டேட்டிங் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இதுவரை, 100 ஆண்களுடன் டேட்டிங் சென்றுள்ளதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். இவரது கணவர் ரோபர்ட் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோயின் காரணமாக இறந்துவிட்டார்.

கணவரின் இறப்பிற்கு பிறகு, தனிமையில் வாழ்க்கையை நடத்தி வந்த இவர், IllicitEncounters.com என்ற இணையதளம் வாயிலாக ஆண்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள ஆரம்பித்தார்.

இந்த தளம், திருமணமான ஆண்கள் பிற பெண்களுடன் தொடர்பை வைத்துக்கொள்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. Gweneth தற்போது நகைதொழில், பங்குதாரர் மற்றும் தொழில்நுட்ப நிறுவன முதலாளியாகவும் இருக்கிறார்.

இவர் தனது தொழிலை ஒருபக்கம் கவனித்த வந்தாலும், திருமணமான ஆண்களுடன் டேட்டிங் சென்று வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது, என்னை தேடி வரும் திருமணமான ஆண்களுக்கு என்னால் முடிந்த அளவு அவர்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிப்பேன்.

அவர்கள், மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால், வாழ்வில் வெறுமைக்கு சென்ற கணவன்மார்கள் என்னை தேடி வருகின்றனர். வருடத்திற்கு £100,000 பவுண்ட் செலவு செய்து உலகம் முழுவதும் சுற்றுலா செல்கிறேன். என்னுடன் இருக்கும் ஆண்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும், அதே சமயத்தில் நானும் எனது வாழ்க்கையை சந்தோஷமாக கழிக்க வேண்டும் .

இதுவரை, 100 ஆண்களுடன் டேட்டிங் சென்றுள்ளேன். தற்போது, நான் ஒரு ஆணை திருமணம் செய்துள்ளேன். அவருடன் சேர்ந்து பாரீஸ் நகருக்கு சுற்றுலா செல்லவிருக்கிறேன். இந்த சுற்றுலாவுக்காக, £75,000 பவுண்டினை ஒதுக்கியுள்ளேன். தனிப்பட்ட விமானம் மூலம் பாரீஸ் சென்று அங்கு Ritz ஹொட்டலில் தங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...