பிரித்தானியாவில் பாடசாலை மாணவி மீது கொலைவெறி தாக்குதல்: பொதுமக்களுக்கு பொலிசார் கோரிக்கை

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவின் ஹாம்ஷயர் பகுதியில் பாடசாலை மாணவி கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் பொலிசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சவுத்தாம்டன் பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு வளாகம் ஒன்றில் 13 வயதேயான Lucy McHugh கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் கடந்த வியாழனறு சடலமாக மீட்கப்பட்டார்.

இதனையடுத்து குறித்த இளம்பெண் அணிந்திருந்த ஆடையின் புகைப்படங்களை வெளியிட்ட பொலிசார், இந்த விவகாரம் தொடர்பில் நேரடிப்பார்வையாளர்கள் முன்வந்து விசாரணைக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே குறித்த இளம்பெண் கொலை தொடர்பில் 24 வயது இளைஞரை கைது செய்துள்ள பொலிசார், பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை தொடர்பில் அவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் இதுவரை இளம்பெண் கொலையில் தொடர்புடைய ஆயுதம் என்ன என்பது குறித்து பொலிசாருக்கு சந்தேகம் இருப்பதாகவும், பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...