தன் மனைவியைக் குறித்து உளறிய பிரித்தானிய அரசியல்வாதி: மறைந்திருக்கும் பின்னணி

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவின் புதிய வெளியுறவுச் செயலரான Jeremy Hunt, தனது முதல் சீனப்பயணத்தின்போதே தன் மனைவியைக் குறித்து உளறிக் கொட்டிய சம்பவம் அசௌகரியமான ஒரு சூழலை ஏற்படுத்தியது.

பிரித்தானிய வெளியுறவுச் செயலரான Jeremy Huntஇன் மனைவியான Lucia Guo ஒரு சீனர். இருவருக்கும் மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.

பீஜிங்கிற்கு சென்றுள்ள Jeremy Hunt தனக்கும் சீனாவுக்கும் உள்ள நட்பை வலியுறுத்துவதாகக் கருதி, தனது மனைவியும் சீனர்தான் என்று சொல்வதற்கு பதிலாக தவறுதலாக தனது மனைவி ஒரு ஜப்பானியர் என்று உளறிவிட்டார்.

உடனடியாக தனது தவறைத் திருத்திக் கொண்ட அவர் அது ஒரு பயங்கரமான தவறு என்று கூறினாலும் அவரது ஒரு சிறிய உளறலுக்கு பின்னால் ஒரு பிரச்சினைக்குரிய விடயம் இருக்கிறது.

சீனாவுக்கு பதில் ஜப்பான் என்று கூறியது பெரிய தவறா என்றால், ஆம், ஏனென்றால் சீனாவும் ஜப்பானும் பல நூற்றாண்டுகளாக பரம விரோதிகள்.

சமீபகாலமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டாலும், 1930 மற்றும் 40களில் சீனாவின் சில பகுதிகளை ஜப்பான் பிடித்துக் கொண்ட இரத்தக் களறியான சம்பவங்களை யாரும் இன்னும் மறக்கவில்லை, மறக்கவும் முடியாது.

இதனால்தான் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா அடுத்த ஆண்டு வெளியேற உள்ள நிலையில், சீனாவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதற்காக வந்த இடத்தில் Jeremy Hunt உளறிக்கொட்டிய விடயம் பிரச்சினைக்குரிய ஒன்றாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்