பிரித்தானியாவை உலுக்கிய ஆசிட் வீச்சு சம்பவம்... துடிதுடிக்க இறந்த அப்பாவி தாயார்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் ஆசிட் வீச்சு சம்பவத்தால் முதன் முறையாக அப்பாவி தாயார் ஒருவர் மரணமடைந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

பிரித்தானியாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3-ஆம் திகதி Frogmoor பகுதியில் வைத்து குறித்த ஆசிட் வீச்சு சம்பவம் நடந்துள்ளது.

இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 19 வயது இளைஞர் Xeneral Webster இன்னொரு இளைஞருடன் ஏற்பட்ட தகராறின்போது மறைத்து வைத்திருந்த ஆசிட் போத்தலை எடுத்து வீசியுள்ளார்.

ஆனால் அந்த ஆசிட் போத்தலானது Joanne Rand என்ற 47 வயது தாயாரின் மீது விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

11 நாட்கள் தீவிர சிகிச்சையில் இருந்த Joanne Rand உடல் உறுப்புகள் செயலிழந்து இறுதியில் மருத்துவமனையிலேயே மரணமடைந்தார்.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இளைஞர் Webster-கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

பிரித்தானியாவில் ஆசிட் வீச்சு சம்பவத்தில் ஒருவருக்கு கடும் சிறை தண்டனை வழங்கப்படுவது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது.

இதனிடையே தண்டனை தீர்ப்பு கேட்டு கொந்தளித்த Webster, தண்டனை காலம் முடிவடைந்து நான் திரும்பும்போது நீங்கள் அனைவரும் மரணமடைந்திருப்பீர்கள் என வசைபாடியுள்ளான்.

மரணமடைந்த Joanne Rand-ன் மகள் கேட்டி தாயாரின் மறைவு குறித்து தெரிவிக்கையில், ஒரு நல்ல தோழியை இழந்துவிட்டேன் என கண்ணீர் சிந்தியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers