அதிகரிக்கும் பிரித்தானியாவின் வெப்பநிலை: எச்சரிக்கும் விவசாயிகள்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ஐபீரிய தீபகற்பத்திலிருந்து வீசும் வெப்பக் காற்றுகள் பிரித்தானியாவின் வெப்பநிலையை அதிகரித்துள்ள நிலையில் இதனால் வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இன்று 77 டிகிரியாக உள்ள வெப்பம் வெள்ளிக்கிழமைவாக்கில் 90 டிகிரியைத் தொடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஸ்பெயினின் வெப்பநிலை 188 டிகிரியை எட்டும் என்னும் அதிர்ச்சி செய்தியும் வெளியாகியுள்ளது.

இந்த வெப்பநிலைக்கு காரணம் ஐபீரிய தீபகற்பத்திலிருந்து வீசும் வெப்பக் காற்றுகள் ஆகும்.

ஸ்பெயினிலும் போர்ச்சுகல்லிலும் வெப்பநிலை முறையே 104 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் 118 டிகிரி ஃபாரன்ஹீட்டை எட்டும் என ஏற்கனவே வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இதே வெப்ப காற்றுகளால்தான் பிரித்தானியாவிலும் வெப்பம் அதிகரித்துள்ளதோடு வெள்ளிக்கிழமை தென் பகுதிகளில் வெப்பநிலை 90 டிகிரியைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வெப்பத்தினால் நாட்டின் வயல்கள் காய்ந்து போய் விட்டன, கடந்த வார இறுதியில் மழை பெய்த நிலையிலும் புல் வளர்ச்சி குறைந்துள்ளதோடு விளைச்சலும் குறைந்துள்ளது.

இந்த வெப்பத்தினால் உணவு உற்பத்தியில் இதற்கு முன் எப்போதும் இராத அளவிற்கு பாதிப்பு இருக்கும் என்று விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்