வெளியூர் செல்வதாக காதலியிடம் கூறிவிட்டு வேறு பெண்ணை மணந்த காதலன்: துடித்து போன காதலி செய்த செயல்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் காதலியிடம் வெளியூருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற காதலன் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

Mumsnet என்னும் வலைதளத்தில் பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், நானும் இளைஞர் ஒருவரும் சில காலமாக டேட்டிங்கில் இருந்து வந்தோம்.

இந்நிலையில் சில வாரங்கள் வெளியூருக்கு விடுமுறைக்கு செல்வதாக என் காதலர் என்னிடம் கூறிவிட்டு சென்றார்.

ஆனால் அங்கு சென்ற அவர் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

என் காதலரின் புதுமனைவியின் பேஸ்புக் புகைப்படத்தை பார்த்தே இது எனக்கு தெரியவந்தது.

இந்த விடயம் எனக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது, என்னை ஏமாற்றிய உண்மையை என் காதலரின் மனைவியிடம் கூறலாம் என நினைத்தேன், ஆனால் திருமணமான உடனேயே அவரிடம் இதை கூறி அவர் மனதை புண்படுத்த விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் இப்பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளதோடு, ஏமாற்றிய இளைஞரை அவர் திருமணம் செய்த பெண்ணிடம் மாட்டி விட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்