விக்டோரியா நதிக்கரையில் காதல் மனைவி மெர்க்கலுடன் இளவரசர் ஹரி

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரியின் காதல் மனைவி மேகன் மெர்க்கல் தமது 37-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகின்றார்.

இளவரசர் ஹரியுடனான திருமணம் முடிந்து இரண்டரை மாதங்கள் கடந்த நிலையில், முதல் முறையாக தனது காதல் கணவருடன் பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அரசியல் சார்ந்த புத்தகங்களை விரும்பி வாசிக்கும் மேகன் இறையியல் தொடர்பான புத்தகங்களை விரும்பி படிப்பார்.

தனது காதல் மனைவிக்கு Everybody Needs Somebody To Love என்ற புத்தகத்தை பரிசாக அளித்துள்ளார் இளவரசர் ஹரி.

மேலும், பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு சுற்றுலாவாக தனது மனைவியை தென் ஆப்பிரிக்க நாடான Botswana க்கு அழைத்து செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, இன்று பிறந்தநாளை முன்னிட்டு விக்டோரியா நதிக்கரையில் அமைந்துள்ள Livingstone எனும் பகுதியில் ஹரியும் மெர்க்கலும் தனியாக தங்கியிருந்து பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers