பிரித்தானியாவில் நம்பி வீட்டிற்கு வந்த சிறுவன்! 100 தடவை துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் கேம் விளையாடுவதற்காக வந்த சிறுவனை இளைஞர் ஒருவர் 100 தடவைக்கு மேல் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Greater Manchester-ன் Hyde பகுதியைச் சேர்ந்தவர் Anwar Ali(33). இவர் மீது கடந்த ஆண்டு பாலியல் துஷ்பிரயோகம் குறித்து பொலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டதால், பொலிசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த வேளையில், Anwar Ali-க்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இது குறித்து உள்ளூர் ஊடகம் தெரிவிக்கையில், Anwar Ali பிளே ஸ்டேசன் மற்றும் Xbox-ன் மிகப் பெரிய தீவிர ரசிகர் என கூறப்படுகிறது.

கடந்த 2003-ஆம் ஆண்டு Anwar Ali தன்னுடைய 18 வயதில் பக்கத்து வீட்டில் இருக்கும் 5 வயது சிறுவன் ஒருவனை கேம் விளையாடுவதற்காக தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது கேம் விளையாட வந்த சிறுவனிடம் இவர் மிகவும் மோசமாக நடந்துள்ளார். முதலில் முத்தம் கொடுத்த இவர் அதன் பின் சிறுவனிடம் மிகவும் மோசமாக நடந்துள்ளார்.

இவரின் இந்த செயல் 2007-ஆம் ஆண்டு வரை தொடர்ந்ததாகவும், இதனால் 100-க்கும் மேற்பட்ட முறை சிறுவன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளான் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு இது குறித்து பொலிசாரிடம் அளித்த புகாரின் பெயரிலே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers