கோடை வெயிலிலும் தண்ணீர் கஷ்டமின்றி வாழும் ஒரே பிரித்தானியர்: எப்படி தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் கோடை வெயில் சுட்டெரிக்க, தண்ணீர்த் தட்டுப்பாடு வரும் என செய்திகள் பரவ, இந்நிலையில் ஒருவர் மட்டும் வழக்கம்போல தண்ணீருக்கு எந்த தட்டுப்பாடுமின்றி தன் தோட்டத்தைக்கூட நன்றாக பராமரித்து வருவது ஒரு காலத்தில் அவரைப் பார்த்து சிரித்த மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Lancashireஐச் சேர்ந்தவர் Steve Prescott (61), அவரது மனைவி Anita (50), கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் அரசாங்கம் வழங்கும் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட பயன்படுத்தியதில்லை என்கிறார்கள் இருவரும்.

மழை பெய்யும்போதெல்லாம் பெரிய பெரிய பிளாஸ்டிக் டாங்குகளில் தண்ணீரை சேமிப்பது Steveஇன் வழக்கம்.

அவர் செய்வதைப் பார்த்து அக்கம்பக்கத்தவர்கள் அவருடைய முதுகுக்குப் பின்னால் சிரிப்பார்கள்.

கிட்டத்தட்ட 260 கேலன் தண்ணீரை அவர் இதுவரை சேமித்து வைத்துள்ளார். மொத்த பிரித்தானியாவும் வெயிலில் தண்ணீரின்றித் தவிக்க அவர் மட்டும் இன்னும் வழக்கம்போல தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுகிறார்.

பிரித்தானியாவில் பல பகுதிகளில் தண்ணீர் வழங்கும் நிறுவனமான United Utilities, தண்ணீர்க் கட்டுப்பாடுகளை விதிக்கும் சூழல் ஏற்படலாம் என ஏற்கனவே எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது Steveஇன் செய்தியைக் கேள்விப்பட்ட United Utilities, பிரித்தானியாவிலுள்ள மற்றவர்களும் அவரைப் பின்பற்றும்படி ஆலோசனை கூறியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers