பிரித்தானியாவில் மாயமான இளம்பெண் மருத்துவர்! ஒரு வாரமாக நீடிக்கும் மர்மம்

Report Print Kabilan in பிரித்தானியா

பிரித்தானியாவில் 28 வயது இளம் பெண் மருத்துவர் மர்மமான முறையில் காணாமல் போன விவகாரத்தில், பொலிசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் ராயல் ஸ்டோக் பல்கலைக்கழக மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பெண் மருத்துவர் சமந்தா ஈஸ்ட்வுட்(28). இவர் கடந்த ஜூலை 27ஆம் திகதி இரவு பணிக்கு சென்றுள்ளார்.

அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது சகோதரி ஜிம்மா பொலிசாரிடம் புகார் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, பொலிசார் தேடுதல் பணியில் இறங்கினர். சமந்தாவின் வீடு ஸ்டாக்டன் புரூக் பகுதியில் அமைந்துள்ளது.

அவர் காணாமல் போன நாளில் இருந்து அவரது வங்கி கார்டுகளும் தொலைந்து போயுள்ளன. சமந்தாவின் கார் அவரது Driveway-லேயே நிறுத்தப்பட்டிருந்தது. மேலும், சமந்தாவின் வீட்டிலிருந்து அவரது கைப்பையும் காணாமல் போயுள்ளதாக பொலிசாருக்கு தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து, தீவிர விசாரணையில் பொலிசார் இறங்கினர். கடந்த ஆண்டு சமந்தாவிற்கு திருமண நிச்சயம் செய்யப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த மாதம், அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தனது திருமணத்திற்காக வாங்கிய ஆடையை தான் அணியவில்லை என்று சமந்தா பதிவிட்டிருந்தது தெரிய வந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, சமந்தாவின் வீட்டிற்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான வகையில் உலவிய 32 வயது நபர் ஒருவரை பொலிசார் கைது செய்தனர். ஆனால், விசாரணைக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

ஒரு வாரமாக மர்ம நீடிப்பதால் பொலிசார் இந்த வழக்கை துரிதகதியில் விசாரித்து வருகின்றனர். மேலும், சந்தேகத்திற்கிடமான வகையில் ஏதாவது இடத்தில், வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தால் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers