சொந்த தந்தையை ரகசியமாக சந்திக்கவிருக்கும் மேகன் மெர்க்கல்: எங்கே தெரியுமா?

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரியை திருமணம் செய்து கொண்டதன் பின்னர் முதன் முறையாக தமது தந்தையை சந்தித்து குடும்ப உறவை புதுப்பிக்க உள்ளார் மேகன் மெர்க்கல்.

இந்த சந்திப்பானது மிக ரகசியமாக இருக்கும் எனவும், அம்ந்ரிக்காவின் ஏதேனும் ஒரு நகரத்தில் வைத்து நடைபெறும் எனவும் மேகன் மெர்க்கலின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இளவரசர் ஹரி மற்றும் மேகன் மெர்க்கலின் திருமணம் கடந்த மே மாதம் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்தது என்றாலும், அந்த ஆடம்பர விழாவில் மேகன் மெர்க்கலின் தந்தை தாமஸ் கலந்துகொள்ளவில்லை.

அதன் பின்னர் ஊடகங்களை சந்தித்த அவர் தமது மகள் தம்மை வந்து சந்திக்காததில் வருந்துவதாக தெரிவித்தார்.

அரண்மனை அதிகாரிகள் தமது தொலைபேசி அழைப்பை கண்டுகொள்வதில்லை எனவும், தமது மகள் தொடர்பு எண்களை கூட மாற்றியுள்ளதாகவும் அவர் குற்றச்சாட்டு முன்வைத்தார்.

மட்டுமின்றி 74 வயதான தாம் இனி அதிக நாட்கள் உயிருடன் இருக்கப்போவது இல்லை எனவும், அதற்கு முன்னர் ஒருமுறையேனும் தமது மருமகனும் பிரித்தானிய இளவரசருமான ஹரி அழைத்து பேச வேண்டும் எனவும், தமது மகளிடம் பேசி பல ஆண்டுகள் ஆனது போன்று இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையிலேயே மேகன் மெர்க்கல் தமது தந்தையை ரகசியமாக சந்தித்து குடும்ப விரிசலை சரிசெய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மாத இறுதியில் மேகன் மெர்க்கல் தனியாக அமெரிக்கா செல்ல இருப்பதாகவும், அப்போது தமது தந்தையை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது மெக்சிகோவில் இருக்கும் தந்தைக்கு இந்த தகவலை தெரியப்படுத்தி உள்ளதாகவும், 2 நாட்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வந்து செல்லும் வகையில் திட்டமிடவும் அவருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சந்திப்புக்கான இடம் மற்றும் திகதிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சந்திப்பில் இளவரசர் ஹரி கலந்துகொள்ளமாட்டார் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers