கார் திருடர்களை அடித்து விரட்டிய வயதான பெண்மணி: ருசிகர காணொளி!

Report Print Vijay Amburore in பிரித்தானியா
191Shares
191Shares
ibctamil.com

இங்கிலாந்தில் காரை திருட முயன்ற இரண்டு பேரை வயதான பெண்மணி ஒருவர் துணிவுடன் சண்டையிட்டு விரட்டியடிக்கும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இங்கிலாந்தின் Birmingham பகுதியில் கார் திருடர்கள் இரண்டு பேர், 55 வயதுள்ள பெண்மணி ஒருவரை தாக்கி காரை திருட முயற்சி செய்துள்ளனர்.

இந்த வீடியோக்களை சம்மந்தப்பட்ட பெண் தன்னுடைய முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். அந்த காணொளியில், வயதான பெண்மணி ஒருவர் தன்னுடைய வீட்டின் கதவை மூடிவிட்டு திரும்பும்பொழுது, வேகமாக வந்த இரண்டு நபர்கள் அவரை தாக்க தொடங்குகின்றனர்.

அதில் ஒருவன் பெண்மணியின் கைப்பையை எடுக்க முற்படுகையில், மற்றொருவன் கார் சாவியை பறித்துக்கொண்டு கார் இருக்கும் இடத்தை நோக்கி ஓடுகிறான்.

இதற்கிடையில் கைப்பையை பறிக்க முயன்ற திருடனை அந்த வயதான பெண் எதிர்த்து தாக்க ஆரம்பிக்கிறார். இதில் வலி தாங்க முடியாமல் அவன் அங்கிருந்து தப்பித்து செல்கிறான்.

அதே சமயம் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வேகமாக ஓடிவந்த பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர், உடனடியாக கார் திருடனை நோக்கி செல்கிறார். அதற்குள் சுதாரித்துக் கொண்ட திருடன் அங்கிருந்து தப்பித்து செல்வதை போல அந்த காணொளியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்