படுக்க முடியாமல் தவித்த பிரித்தானியாவின் உயரமான மனிதர்.. இறுதியில் என்ன ஆனது தெரியுமா?

Report Print Raju Raju in பிரித்தானியா
172Shares
172Shares
ibctamil.com

பிரித்தானியாவின் உயரமான மனிதராக கருதப்படும் பவுல் ஸ்டுர்கிஸ் தாராளமாக படுத்து கொள்ள ஒருவழியாக படுக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

பவுல் ஸ்டுர்கிஸ் (30) என்ற கூடைப்பந்து வீரரின் உயரம் 7 அடி 7 அங்குலம் ஆகும்.

இவர் தான் நாட்டின் உயரமான மனிதராக கருதப்படுகிறார். இந்நிலையில் பவுலால் தனது வீட்டு படுக்கை மெத்தையில் நிம்மதியாக படுக்கமுடியவில்லை.

இதற்கு காரணம் அவர் உயரம் தான், பவுல் தனது படுக்கையில் குறுகலாக படுத்து வந்ததால் சிரமத்துக்கு ஆளானார்.

அவர் உயரத்துக்கு படுக்கையை தயார் செய்து கொடுக்க எந்த பர்னிச்சர் நிறுவனமும் முன்வராமல் இருந்தது.

இந்நிலையில் Hartlepool நகரில் உள்ள Rafferty's பர்னிச்சர் கடை பவுலுக்காக சிறப்பு படுக்கையை தயார் செய்ய முன்வந்தது.

அதன்படி 8 அடி உயரம் கொண்ட படுக்கையை தயார் செய்து பரிசோதனை செய்துள்ளது.

இது குறித்து Rafferty's நிறுவனத்தின் தலைவர் கோலின் கூறுகையில், நாங்கள் எந்தளவு உயரம் கொண்ட படுக்கையையும் தயாரிப்போம்.

இதை தெரிந்து கொண்டு பவுல் எங்களிடம் வந்தது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்