பிரித்தானியாவில் அம்மாவின் உயிரைக் காப்பாற்ற 6 வயது சிறுமி செய்த செயல்: வெளியான நெகிழ்ச்சி ஆடியோ

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் 6 வயது சிறுமி ஒருவர் அம்மாவின் உயிரைக் காப்பாற்றியுள்ள சம்பவம் அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Stafford பகுதியைச் சேர்ந்தவர் Faye(24). இவருக்கு Ruby Walter என்ற 6 வயது மகள் உள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜுன் மாதம் 7-ஆம் திகதி Faye-வுக்கு திடீரென்று உடல்நிலை பிரச்சனை காரணமாக சுயநினைவற்ற நிலைக்கு சென்றுவிட்டார்.

அப்போது வீட்டில் இருந்த Ruby Walter கொஞ்சம் கூட பதட்டப்படாமல், எப்படி அம்மாவை காப்பாற்றலாம் என்று யோசித்துள்ளார்.

அதன் பின் அம்மா சொல்லிக் கொடுத்தது போல், அவசரசிகிச்சை எண்ணுக்கு தொடர்பு கொள்ள யோசித்துள்ளார். ஆனால் அதற்கு போன் வேண்டும் என்பதால், அம்மாவின் போனை எடுத்துள்ளார்.

போன் லாக்கில் இருந்ததால், உடனடியாக அம்மாவின் கை ரேகையை போனில் வைத்து அழுத்தி, லாக்கை எடுத்துள்ளார்.

இதையடுத்து அவசரசிகிச்சை எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அதில் போனை எடுத்த உதவியாளர் என்ன ஆச்சு என்று கேட்க, உடனே சிறுமி நடந்தவற்றை கூறியுள்ளார். உடனே அந்த உதவியாளர் வீட்டின் முகவரியை பொலிசார் மற்றும் ஆம்புலன்சிற்கு தெரிவித்துவிட்டு, தொடர்ந்து சிறுமியிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

ஏனெனில் சிறுமி பயப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதால், இப்படி பேசிக் கொண்டே இருந்துள்ளார். இறுதியில் மருத்துவர்கள் மற்றும் பொலிசார் வீட்டை நெருங்கியவுடன், போனில் பேசிய உதவியாளர் உங்கள் வீட்டின் கதவை திறங்கள் என்று கூற, உடனே சிறுமி நீங்கள் இங்கே வந்துவிட்டீர்களா என்று நம்ப முடியாமல் கேட்கிறார்.

இது தொடர்பான ஆடியோ தற்போது வெளியாகியுள்ளதால், அதை கேட்கும் போது அனைவரும் சிறுமிக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து சிறுமியின் தாய் கூறுகையில், நான் அவளுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறேன், இது போன்ற சூழ்நிலையில் இந்த எண்ணிற்கு அழைக்க வேண்டும். அவர்களிடம் விவரங்களை சொல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறேன்.

தற்போது என் மகளை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் சாதூர்யமாக செயல்பட்ட சிறுமிக்கும் சான்றிதழ் கொடுத்து கவுரவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்