கழிவறையில் ஆறு மணி நேரம் நிர்வாணமாக பூட்டிவைக்கப்பட்ட நபர்: எப்படி வெளியில் வந்தார் தெரியுமா?

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் ராணுவ அதிகாரியை அவருக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்கள் கழிவறையில் நிர்வாணமாக பூட்டி வைத்த நிலையில் கதவை உடைத்து கொண்டு வெளியில் வந்துள்ளார்.

எசக்ஸ் கவுண்டியில் உள்ள ராணுவ குடியிருப்பில் ராணுவ அதிகாரி ஒருவர் தனது குழுவினருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.

போதையில் அதிகாரி தூங்கிய நிலையில் அவரின் உடைகளை கழட்டிய குழுவினர், அப்படியே தூக்கி கொண்டு கழிவறைக்கு சென்றுள்ளனர்.

பின்னர் கழிவறையை பூட்டியுள்ளனர். தூக்கம் தெளிந்து அதிகாரி எழுந்து கதவை திறக்குமாறு கூறினார்.

ஆனால் தங்களின் ஊதியத்தை உயர்த்தினால் தான் கதவை திறப்போம் என அவர்கள் கூறினர்.

இதற்கு பதில் சொல்லாத அதிகாரி ஆறு மணி நேரம் கழிவறையிலேயே இருந்துள்ளார்.

பின்னர் கோபத்தில் கழிவறையின் சுவற்றை உடைக்க முயன்று அதை செய்தும் காட்டிய அதிகாரி அங்கிருந்து வெளியில் வந்தார்.

ஆனால் அதிகாரியை கழிவறையில் வைத்து பூட்டிய குழுவினருக்கு தண்டனை வழங்கப்படாத நிலையில், சுவற்றை உடைத்து சேதப்படுத்திய அதிகாரிக்கு பலத்த அபராதம் விதிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடந்து வருவதாக ராணுவம் தலைமையிடம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers