குழந்தையின் கண்களை தோண்டி கொடூரமாக கொலை செய்ய முயன்றவனுக்கு கிடைத்த தண்டனை

Report Print Vijay Amburore in பிரித்தானியா
169Shares
169Shares
Nallur-Travels-August-Promotion

இங்கிலாந்தில் 7 மாத கைக்குழந்தையின் கண்களை தோண்டி கொடூரமாக கொலை செய்ய முயன்ற நபருக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை விதித்துள்ளது.

இங்கிலாந்தின் Luton பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திடீரென குழந்தை ஒன்று கதறி அழும் சத்தம் கேட்டுள்ளது.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டார்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த பொழுது, மர்ம நபர் ஒருவர் 7 மாத குழந்தையினை கையில் ஏந்தியவாறு, மரத்தை துளையிடும் கத்தியால் குழந்தையின் கண்களை தோண்டி எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.

இதனை பார்த்து கோபமடைந்த பொதுமக்கள் குழந்தையை கொன்று விடாதே என கூச்சலிட்டதோடு, அந்த கொடூரனுக்கும் எச்சரிக்கைக்கு விடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அந்த நபர் குழந்தையை 2 மாடியின் ஜன்னல் பகுதியிலிருந்து குழந்தையை தூக்கி எறிந்தான்.

உடனே பதறி சென்ற பொதுமக்கள் லாவகமாக குழந்தையை பிடித்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் குழந்தையின் கன்னம் மற்றும் முக பகுதிகளில் லேசான வெட்டு காயம் ஏற்பட்டிருந்தது.

பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், குற்றவாளியின் பெயர் Sean Ziemelis (31) என்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட Ziemelis-க்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அங்கு வழக்கினை விசாரித்த நீதிபதி, 3 வழக்குகளின் கீழ் குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்