30 பெண்களை துஸ்பிரயோகம் செய்த பிரித்தானிய பொலிஸாருக்கு விடுதலை! கொந்தளிக்கும் பொதுமக்கள்

Report Print Vijay Amburore in பிரித்தானியா
307Shares
307Shares
Nallur-Travels-August-Promotion

பிரித்தானியாவில் பொலிஸாராக இருந்து கொண்டு 30 பெண்களை துஸ்பிரயோகம் செய்த கொடூரன் பரோலில் வந்துள்ளதற்கு பொதுமக்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரித்தானியாவின் பொலிஸாராக பணியாற்றி வந்த Stephen Mitchell (50), காவல்நிலையத்திற்கு வெளியில் போதை மருந்திற்கு அடிமையானவர்கள், கடையில் வேலை செய்யும் பெண்கள் என 30 பேரை பாலியல் துஸ்பிரயோகம் செய்திருந்தார். அதில் மாற்றுத்திறனாளி பெண்களும் அடங்குவர்.

இதுதொடர்பான வழக்கு கடந்த ஜனவரி 2011-ம் ஆண்டு Newcastle Crown நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பொழுது, Stephen ஒரு "இரக்கமற்ற பாலியல் வேட்டைக்காரன்" என நீதிபதி கடுமையாக விமர்சித்தார்.

குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி, Stephen-ஐ எந்தவித காரணத்திற்காகவும் வெளியில் விடக்கூடாது என எச்சரித்தார். மேலும் குற்றவாளி 7 1/2 ஆண்டு சிறை தண்டனையை கடந்த பிறகே அவருக்கு பரோல் வழங்கப்பட வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது உத்தரவிட்டார்.

இந்த நிலையில் Stephen-ஐ பரோலில் காவல்துறை நிர்வாகம் விடுவித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் பலரும் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் நீதி செத்துவிட்டதாக? இதுதான் குற்றவாளிக்கு வழங்கப்படும் ஒரு தண்டனையா எனவும் கடமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

முன்னதாக Stephen-ஐ சிறையில் பரிசோதித்த மனநல மருத்துவர் ஒருவர், தற்போது அவரை விடுவித்தால் பெண்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்