மரணப்படுக்கையில் காதலன்... கட்டியணைத்தபடி பிரியாவிடை கூறிய காதலி: நெஞ்சை உருக்கும் புகைப்படம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
1311Shares
1311Shares
ibctamil.com

பிரித்தானியாவின் வட மேற்கு வேல்ஸ் பகுதியில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு ஏற்பட்ட காதலனை மருத்துவமனை படுக்கையில் கட்டியணைத்தபடி அவரது காதலி பிரியாவிடை அளித்த புகைப்படம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

வட மேற்கு வேல்ஸ் பகுதியில் உள்ள Tywyn நகரில் பெருவெள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகி பின்னர் பெரும் முயற்சியால் காப்பாற்றப்பட்டவர் 16 வயதான Blake Ward.

கடந்த சொவ்வாய் அன்று நடந்த இந்த விபத்தை அடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிளேக் வார்டு உயிர் காக்கும் கருவிகளின் துணையுடன் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்த நிலையில் அவரது மூளை செயலிழந்து வருவதாகவும் இனி பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதை அடுத்து, அவருக்கு அளிக்கப்பட்டு வந்த உயிர் காக்கும் கருவிகளை பெற்றோர்கள் அனுமதியுடன் நீக்கியுள்ளனர்.

இதனிடையே உயிர் காக்கும் கருவிகளை அகற்றும் முன்னர் தமது காதலருக்கு கடைசியாக பிரியாவிடை கூறிய Stephanie,

தமது காதலருக்கு பிடித்தமான உடையில் மருத்துவனை வந்து அவர் படுக்கையில் அவரை கட்டியணைத்தபடி கண்னீர் விட்டு கதறியுள்ளார்.

குறித்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்ட Stephanie, இந்த நாள் எனது வாழ்க்கையில் மறக்க முடியாதது மட்டுமல்ல, மிகவும் கடினமான நாளும் கூட என்றார்.

கடந்த சொவ்வாய் அன்று மிக மோசமாக விபத்தில் சிக்கிய பிளாக் அன்று முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அவரது தலையில் ஏற்பட்ட காயம் மூளையை கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்க வைத்துள்ளது.

இனிமேலும் அவர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், அவரது உயிர் காக்கும் கருவிகளை அகற்ற பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கையில் பல சிகரங்களை தொட பேராவல் கொண்டவர் பிளாக் ஆனால் அவை அனைத்தும் ஒரே ஒரு விபத்தால் தலைகீழாக மாறியுள்ளது.

இன்று பிளாக் தங்களுடன் இல்லை என்பதே நம்ப முடியவில்லை என உருக்கமாக Stephanie பதிவு செய்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்