ஒபாமாவின் மகளுக்கு முத்தமிட்ட லண்டன் காதலன்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
620Shares
620Shares
Nallur-Travels-August-Promotion

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மூத்த மகள் மாலியா, லண்டனை சேர்ந்த Rory Farquharson என்பவரை காதலித்து வருகிறார்.

கடந்த ஆண்டு Harvard University - யில் இவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்டபோது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவர்கள் இருவரும் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மைதானத்தில் வைத்து முத்தமிட்டுக்கொண்ட புகைப்படம் முதல் முறையாக வெளியானது.

இதனைத்தொடர்ந்து, இவர்கள் இருவரும் பொது இடங்களில் ஒன்றாக சேர்ந்து வலம் வந்தனர். இந்த புகைப்படங்கள் குறித்து ஒபாமா எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.

மேலும், தனது மகள் தற்போது டேட்டிங் செல்ல ஆரம்பித்துவிட்டார் என நகைச்சுவையாக ஒருமுறை தெரிவித்தார்.

தற்போது, லண்டனில் ரயில் நிலையத்தில் வைத்து, மாலியாவின் நெற்றில் காதலன் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படம் மற்றும் மற்றொரு புகைப்படத்தில் மாலியாவின் கையில் சிகரெட் இருக்கும் புகைப்படங்கள் வெளியானது.

ஆனால், அந்த சிகரெட் தனது காதலனுடையது. தனது காதலன் சிகரெட் பிடிக்கையில் அதனை தனது கையில் வைத்திருந்த பின்னர் அதனை அவரிடம் திருப்பி கொடுத்துள்ளார்.

2016 ஆம் ஆண்டில் மாலியா சிகரெட் பிடித்த புகைப்படங்கள் வெளியானது மட்டுமின்றி தந்தை ஒபாமாவும் சிகரெட் பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளை மாளிகைக்குள் நுழைவதற்கு முன்னர் தான் போதை மருந்து மற்றும் சிகரெட் பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவன் என ஒபாமா ஒருமுறை தனது உரையின்போது தெரிவித்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்