ஓட்டை விழுந்த ஷுவை அணிந்து வந்த பிரித்தானியா இளவரசர்! சங்கடத்திற்குள்ளான மெர்க்கல்: வெளியான புகைப்படம்

Report Print Santhan in பிரித்தானியா

தன்னுடைய நெருங்கிய நண்பரின் திருமணத்திற்கு இளவரசர் ஹரி ஓட்டை விழுந்த ஷுவை போட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

பிரித்தானியா இளவரசர் ஹரி தன்னுடைய சிறு வயது நண்பரான Charlie van Straubenzee-ன் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக Surrey பகுதியின் Frensham-ல் இருக்கும் St Mary the Virgin தேவாலயத்திற்கு மெர்க்கலுடன் சென்றுள்ளார்.

அப்போது இருவரும் நடந்து சென்ற போது ஹரி அணிந்திருந்த இடது கால் ஷுவில் ஓட்டை இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

இது தொடர்பான புகைப்படங்களை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இதே திருமண விழாவின் போது இளவரசி மேர்க்கலின் ஆடையும் விலகியுள்ளது. இதனால் சங்கடத்திற்குள்ளான அவர் அதன் பின் சரி செய்துகொண்டது தொடர்பான புகைப்படமும் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்